ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் சம்பந்தமான அறிக்கையை முன்வைக்கும். தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலமை தொடர்பில் உரையாற்றவுள்ளன.
இலங்கையின் சார்பில் அயலுறவு அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் அதிகாரிகளும் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.