Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்

தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்

சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த ஞாயிறன்று தாயுடன் ஏற்பட்ட சண்டையில், தாயைக் கொன்று அவரது தலையை வெட்டி வாளையொன்றில் வைத்திருந்த அச்சிறுவன், அன்றிரவு தனது வீட்டுக்கு முன் உள்ள சாக்கடையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …