Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சுப் பதவிகளுடன் ஐ.தே.கவில் இணையத் தயாராம்!

மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சுப் பதவிகளுடன் ஐ.தே.கவில் இணையத் தயாராம்!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்தால் மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். அது தொடர்பில் இரகசியப் பேச்சு நடைபெற்று வருகின்றது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாந்த பண்டார சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“கடந்த அரசுடன் ஒப்பிடுகையில் இந்த அரசு எவ்வளவு தூரம் ஜனநாயகமிக்கதாகவும் வெளிப்படைத்தண்மை கொண்டதாகவும் உள்ளது என்பதை மக்கள் அறிவர். இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பாரியதொரு அபிவிருத்தி இலக்கை நோக்கிப்பயணித்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அரசின் பயணத்துக்கு தடை ஏற்படுத்தும் சில செயற்பாடுகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
எமது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலர் திடீரென அரசை விட்டு விலகுவதற்கு முடிவெடுத்துள்ளனர். அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசை விட்டு விலகுவதற்கு இவர்கள் திட்டமிடுகின்றனர். இவ்வாறு விலகினால் அதனால் யாருக்கு நன்மை ஏற்படும் என்று இவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இவர்கள் திடீரென காலைவாருவதன்மூலம் நன்மையடையப் போவது ஐக்கிய தேசியக் கட்சிதான்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்தால் மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். அது தொடர்பில் இரகசியப் பேச்சு நடைபெற்று வருகின்றது. ஆகவே, நாம் அனைவரும் கட்சியின் நலனை அப்படையாகக் கொண்டே செயற்பட வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv