கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர்.
ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர்.
எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை.
எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் பொலிஸ் சேவையினர் எச்சரித்துள்ளனர்.
கொமன்வெல்த் ஸ்ரேடியம், எட்மனில் ; ஆரம்பித்த கனடிய படைகளின் பாராட்டு நிகழ்வொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் 30,000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரேடியம் வீதியில் இரவு 8.15அளவில் கார் ஒன்று போக்குவரத்து சோதனை சாவடி ஒன்றில் மோதியதாக பொலிசார் தெரிவித்தனர். மோதிய வாகனம் பொலிசார் ஒருவரை அடித்து விட்டு ஓடிவிட்டது.
திடீரென எந்த வித அறிவிப்புமின்றி ஆண் சாரதி ஓட்டி வந்த வாகனம்அதி உயர் வேகத்தில்- வெள்ளை செவ்ரொலெட் மலிபு- போக்குவரத்து தடைகளை மோதியதில் பாதசாரிகள் வாகனங்களை விட்டு வேறுபடுத்தப்பட்டனர். பின்னர் வாகனம் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதி அவரை 15அடி உயரத்தில் தூக்கி எறிந்து அதே வேகத்தில் பொலிஸ் வாகனமொன்றில் மோதியுள்ளார்.
குறிப்பிட்ட வாகனத்தில் ISIS கொடி இருந்ததாகவும் சம்பவத்தை விபரித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
30-வயதுடைய மனிதன் காரிலிருந்து வெளியே பாய்ந்து கத்தி ஒன்றினால் எட்மன்டன் பொலிஸ் சேவை அங்கத்தவர் ஒருவரை குத்தியுள்ளான்.பல தடவை குத்திவிட்டு ஓடிவிட்டான் என தெரிவிக்கப்பட்டது. அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Commonwealth Stadium-த்திற்கு அருகாமையில் அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
நடு இரவு யு-ஹால் டிரக் ஒன்று கண்காணிப்பு தடுப்பொன்றில் தடுக்கப்பட்டதாகவும் சாரதியின் பெயர் மலிபு வாகனத்தின் பெயருடன் ஒத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். டிரக் ஒடத்தொடங்கியதும் பொலிசார் துரத்திசெல்ல குறுக்கு நடைபாதையிலும் சந்துகளிலும் நடந்து கொண்டிருந்த மக்களை வேண்டுமென்றே டிரக் மோதிச்சென்றுள்ளது.
ஓடிய வேகத்தில் டிரக் பக்கவாட்டில் சரிந்துள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டான்.
இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதென நம்புவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் அண்மையில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை ஒத்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கை என்ற அடிப்படையில் இச்சம்பவங்கள் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
எட்மன்டன் பொலிஸ், ஆர்சிஎம்பி ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழு மற்றும் அதன் கனடிய பொது பாதுகாப்பு நிறுவனங்கள் இச்சம்பவத்தை பயங்கரவாத நடவடிக்கை கனடாவின் குற்றவியல் சட்ட பிரிவு 83.2 ன்கீழ் விசாரனை செய்கின்றன.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.