Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முல்லைத்தீவில் பதற்றம்! கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாற்றம்..

முல்லைத்தீவில் பதற்றம்! கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாற்றம்..

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது .

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு நகர்பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் அத்துமீறி புகுந்துள்ளனர்.

இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு “சட்டவிரோத கடற்தொழில்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும்” என்று கோசம் எழுப்பிக்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாறி வருகின்ற நிலையில், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் உறுதியான முடிவு எட்டப்படும் வரை தமது போராட்டம் நீரியவள திணைக்களத்திற்கு எதிரே தொடரும் என தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நீரியல்வள திணைக்கள நுழைவாயிலுக்கு எதிரே பிரதான வீதியோரம் தகர கொட்டகை அமைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மீனவர்கள் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv