Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கிழிச்சது பொதுமக்கள்தான்: சீரிய தங்க தமிழ்செல்வன்!

கிழிச்சது பொதுமக்கள்தான்: சீரிய தங்க தமிழ்செல்வன்!

தற்போது செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், எங்கலது அறைகளுக்கு சீல வைத்தது, காலி செய்ய சொலவது எல்லாம் பெரிய விஷயம் அல்ல. அதேபோல் ரூ.80,000 கட்ட வேண்டும் என்கிறார்கள் அதையும் கட்டி விடுகிறோம் என்னும் பிரச்சனை இல்லை.

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதன் விசாரணை எப்படி இருக்கும் என தெரியவில்லை. மேல்முறையீடு காலம் தாழ்த்தப்பட்டால் என்ன செய்வது அதனால்தான் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்துவிட்டோம்.

அதேபோல், அமைச்சர் உதயகுமாரின் பேட்டியை பார்த்தேன். முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த சென்ற போது மக்கள் பலர் எங்களை வரவேற்றனர். எங்கள் ஆதரவாளர்கள் யாரும் பேனரை கிழிக்கவில்லை. அவங்க பேனரை கிழிப்பதுதான் எங்கள் வேலையா?

அதிமுக பேனரை கிழிச்சது பொதுமக்கள்தான். அவர்களுக்கு எவ்வளவு ஆத்திரமும், அதிருப்தியும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv