அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூட இருப்பதாக வெளியான தகவல் குறித்து திமுக உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் பொன்முடி, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் திட்டம் அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், 849 பள்ளிகளில் 5 மாணவர்கள் கூட இல்லாத நிலை இருப்பதாகக் கூறினார். பல தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடுவதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கி, மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், எந்த சூழலிலும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட மாட்டோம் என விளக்கம் அளித்தார்.