Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழிசைக்கு அந்த பயம் வேண்டாம்

தமிழிசைக்கு அந்த பயம் வேண்டாம்

சென்னையில் நேற்று நடிகர் சங்கத்தின் சார்பில் நடந்த அறப்போராட்டத்தில் ஆவேசமாக பேசிய சத்யராஜை மிரட்டும் தொணியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசியது குறித்து சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தமிழிசையின் மிரட்டலுக்கு சத்யராஜ் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.

40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் தவறுகள் நடந்ததே இல்லை. எதிலும் நேர்மை காத்து வருகிறேன். ஐடி ரெய்டு வந்தால் எதுவும் தேறாது. ஒரு அப்பா வேடத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்து, ஒரு பெரிய தலைவர் பயப்பட வேண்டாம்’ என்று கூறினார்.

மேலும் காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி என்று சத்யராஜ் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv