விவகாரம் குறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்த திட்டம் ஒன்றை கூறினார்.
மு.க.ஸ்டாலினின் இந்த திட்டத்திற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். திமுகவுக்கு மக்களவையில் ஒரு எம்பி கூட கிடையாது. மாநிலங்களவையில் நான்கு எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மக்களவை மாநிலங்களை இரண்டுக்கும் சேர்த்து தமிழகத்தில் இருந்து மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். இதில் வெறும் நான்கு எம்பிக்களை வைத்துள்ள திமுக இதுபோன்ற ஒரு திட்டத்தை தெரிவிப்பது குழந்தைத்தனமாக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். வேண்டுமென்றால் தமிழக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜன், காவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலின் கூறுவது கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது போல் உள்ளது. திமுகவுக்கு எத்தனை எம்பிக்கள் உள்ளனர் என்பதை அவர் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.