Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி

வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி

வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது.

குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பவனி யாழ்ப்பாணம் நோக்கி செல்லவுள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய இந்த நடைபயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையது.

அதற்கு முன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்திற்கு காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், மற்றும் சட்டதரணி சுகாஸ், உறுப்பினர்கள், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவளை நடைபயணம் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை தாண்டி பசார் வீதியை நெருங்கிய சமயம் ஊர்வலத்தை தடுத்த பொலிசார், ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தனர்.

இதன் காரணமாக அங்கு சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும் ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv