தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். இது நாள் வரை ட்விட்டரில் பதிலளித்து வந்து கமல்ஹாசன் முதல்முறையாக தனது அரசியல் பயணத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றி பயணம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனிடம் கேள்வி எழுப்பியபோது ” சினிமா செல்வாக்கை வைத்து மட்டும் மக்களிடம் ஆதரவு பெறமுடியுமா என்பது சந்தேகம் தான், வருங்காலத்தில் மக்கள் அவரிடம் எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ஆனால் இவ்வளவு நாள் எதையும் கண்டுக்காமல் திடிரென்று அரசியலில் குதித்து மக்கள் செல்வாக்கை பெறமுடியுமா என்று பத்திரிக்கையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.