Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்தொன்பது மீனவர்கள் இன்று (31) நாடு திரும்புகின்றனர்.

விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘அமாயா’ (AMAYA) என்ற கப்பலில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

மேற்படி கப்பல் மூலம் மாலை காரைக்கால் துறைமுகம் சென்றடையவுள்ள மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் சென்றுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv