Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 27 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைச் செய்தது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்த 27 மீனவர்களை, நேற்று இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல்படை வசம் ஒப்படைத்தது. இந்திய கடற்படை 27 மீனவர்களையும் நேற்று மாலை காரைக்கால் மார்க் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவந்து, நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் திருச்சி மீன் வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 27 மீனவர்களூம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அவர்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv