Thursday , March 28 2024
Home / Tag Archives: tamil tamil newspapers (page 2)

Tag Archives: tamil tamil newspapers

சிக்கிய தீவிரவாதியின் தற்போதைய நிலை என்ன?

குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. கண்டி – அலவத்துகொட, …

Read More »

டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு

கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 …

Read More »

அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். …

Read More »

ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்

இராணுவத்தினர்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது. இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More »

வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு

வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கை

வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு அனைவரையும் பங்கேற்குமாறு வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் செல்வம் அடைக்கலநாதனை சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் எனவும் தமது குடும்ப நிலைமைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்ததுடன் தமது …

Read More »

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது …

Read More »

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு

தி.மு.க.வினர் சாலை மறியல் - மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் …

Read More »

திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் !

திமுக எம்.எல்.ஏ.க்கள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் ! சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தாக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்த திமுகவினரால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபையை ஒத்தி வைத்துவிட்டு படிப்படியாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி …

Read More »

சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

சட்டப்பேரவையில்-ராமதாஸ்

சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாகும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த செயல், அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த வாக்காளப் …

Read More »