Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ரத்த வெள்ளத்தில் மிதக்கும் சிரியா

ரத்த வெள்ளத்தில் மிதக்கும் சிரியா

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது தீவிரமடைந்துள்ள இந்த சண்டையில் பள்ளிகள், வீடுகள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் இறந்துள்ளனர்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 600-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் ஐநா பாதுகாப்புக் கவுன்சில், கவுட்டா நகரில் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் இன்று அல்லது நாளை முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv