கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார்
பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை மீது நபரொருவர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது.
வாள்வெட்டில் படுகாயமடைந்த காந்தி கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கிருபாகரன் என்பவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உழவு இயந்திரத்தில் வந்த நபரொருவரே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=vSm2X6wGbrU