Friday , December 5 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

குழப்பம்:

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., அணியினர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியையும் ஆட்சியையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும் என சசிகலா கூறினார். ஆனால் சசிகலாவை முதல்வராக்க தினகரன் விருமபுவதாக என்னிடம் விஜயபாஸ்கர் கூறினார். நான் முதல்வராக இருந்த போது அமைச்சர்கள் திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தினர். முதல்வர் பதவியிலிருந்து விலக பல தரப்பிலும் எனக்கு நெருக்கடி வந்தது. சிறப்பு சட்டசபை கூட்டத்தில் என்னை மதிக்கவில்லை.எதை சொன்னார்களோ அது நடக்கவில்லை. அவசியமின்றி அரசை மாற்றினார்கள். கட்சியும், ஆட்சியும் தற்போது ஒரிடத்தில் இல்லை.

அனுமதிக்கவில்லை:

ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவுமில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம் அதற்கு அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesநடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. …