Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / இந்துத்துவாவை எதிர்க்க திமுகவை ஆதரிப்பதா?

இந்துத்துவாவை எதிர்க்க திமுகவை ஆதரிப்பதா?

வைகோ இந்துத்துவாவை எதிர்ப்பதாக இருந்தால் முதலில் எதிர்க்க வேண்டியது ராகுல் காந்தியையும், திமுகவையும்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் நலன் கருதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ அறிவித்தார். திராவிட இயக்கத்தை சிதைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கமான திமுகவை ஆதரிப்பதாக வைகோ கூறினார்.

இதற்கு பதி[ல் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-

அண்ணன் வைகோ போன்றவர்கள் இந்துத்துவாவை எதிர்த்து போராடுகிறோம் என்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். திமுக செய்த துரோகத்தை மறந்து அவர்களை தேடி ஆதரவு கொடுக்கிறார் என்றால் அதற்கு ஏதாவது காரண காரியங்கள் இருக்கலாம்.

இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் முதலில் இந்துத்துவா பற்றி பேசும் ராகுலையும், காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் திமுகவையும் எதிர்க்க வேண்டும். பாஜக திராவிட கலாச்சாரத்துக்கு எதிரானது அல்ல. எவ்வளவு தடுத்தாலும் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

யார், யாருடன் கூட்டணி வைத்தாலும் பாஜகதான் காரணம் எனக்கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழிசை கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv