Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் / விஜயகாந்த்தை பார்த்து பயந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

விஜயகாந்த்தை பார்த்து பயந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.

கேப்டன் என்றழைக்கப்பட்ட இவர் நடிகர் சங்கத்தலைவராக இருந்து கலைநிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கக் கடனை அடைத்தார்.

இவர் இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளையும் அழைத்தார். அப்போது பாபா படப்பிடிப்பிலிருந்த ரஜினிகாந்த்தை சந்தித்தாராம்.

அப்போது மற்ற உறுப்பினர்களோடு காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தாராம். இவரை தூரத்திலிருந்து பார்த்த சூப்பர்ஸ்டார் பயந்தே விட்டாராம். பிறகு தான் விஜயகாந்த் என்று தெரிந்ததாம்.

கேப்டன் சூப்பர்ஸ்டாரிடம் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதும் உடனே சரி கண்டிப்பாக வருகிறேன் என பலமுறை சொன்னாராம். இந்த சந்திப்பை பற்றி நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் ஒரு மேடையில் பகிர்ந்து கொண்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv