Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?

கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் சரவணபவன் இல்லை. எனவே அவரை மேற்கோள்காட்டி வெளியான செய்தி சரியானதாக இருக்கும் என எண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv