எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரிடம் எந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள். என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்க கூடாது.
அதையும் மீறி வைத்தால் நான் வேறு மாநிலத்துக்கு செல்வேன். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது என்று கூறியுள்ளார்.