சைட்டம் பிரச்சினை பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருப்பதாக அக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ள மேலதிக விவரங்களாவன:-
“ஜனாதிபதி எங்களுக்கு வழங்கியிருந்த கால எல்லைக்குள் அறிக்கையை அவருக்கு சமர்ப்பித்து விட்டோம். எனவே, இந்த அறிக்கை இன்னும் முடியவில்லை என இலங்கை அரச மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை . நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்தபின் ஜனாதிபதியின் செயலாளருடனும் இது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினோம். இந்த அறிக்கையை வாசித்தபின் ஜனாதிபதி மேலதிக நடவடிக்கையை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்” – என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.