Thursday , October 16 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்

உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த செய்தியைக் கேட்டதும் அதுவரை இறுக்கமான முகத்துடன் வலம்வந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தங்களது சோகத்தை மறந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.குறிப்பாக ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறியழுதார்.

ராஜாஜி ஹாலில் நடைபெற்ற இந்த உருக்கமான நிகழ்வு அங்கு கூடியிருந்த தொண்டர்களை மனமுருக வைத்தது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv