Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க படையினர் தீவிரம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க படையினர் தீவிரம்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமிழர் தாயகத்தில் நாளை (வியாழக்கிழமை) உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தடுக்க படையினர் முயற்சிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டடு வரும் நிலையில், இது குறித்து தென்னிலங்கையில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வடக்கு கிழக்கில் மக்களை படையினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு, நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv