Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய இலங்கைத் தமிழர்!

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய இலங்கைத் தமிழர்!

சர்ச்சைக்குரிய நபரை இலங்கைக்கு நாடு கடத்த தாம் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கு தேவையான ஆவணங்களை வழங்கினால் அவரை நாடு கடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு தேவையான சந்தேக நபரை நாடு கடத்துவதற்கான உடன்படிக்கையில் சிங்கப்பூர் இணைந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை சிங்கப்பூர் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

74 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடிக்கு தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனுக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாடுகடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv