Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!

இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!

தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு கன்னியாகுமாரி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சகோதரன் அவரை தன் சகோதரியுடன் பழகவேண்டாமென எச்சரித்துள்ளார் எனினும் கொலைசெய்யப்பட்ட நபர் அந்த பெண்ணுடன் பழக்கதில் இருந்துள்ளார்.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன் குறித்த நபரை தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலைசெய்து பெற்றோல் ஊற்றி எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv