Sunday , December 22 2024
Home / முக்கிய செய்திகள் / கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா ஸ்ரீலங்கா பிரஜை?

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா ஸ்ரீலங்கா பிரஜை?

கனடாவில் வாழும் ஸ்ரீலங்கா பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்த நாட்டு குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்தமை தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற ஸ்ரீலங்கா பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரின் மறுமதிப்பீடு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்கின்றதனால் அவரை நாடுகடத்தக்கூடாது என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தனது மனைவியான அனூ பாஸ்கரனை கொலை செய்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv