Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை

உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை

உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, நடப்பாண்டில் 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அந்தவகையில் தெற்காசிய நாடுகளில் அமைதியான நாடாக நேபாளம் முன்னணியில் உள்ளது.

அத்துடன், உலகில் அமைதி நாடு என்ற வகையில், ஐஸ்லாந்து உலக நாடுகள் மத்தியில் முதலிடத்தை வகிக்கும் அதேவேளை, உலகில் அமைதியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் அமைதியற்ற நாடு என்ற வகையில் சிரியா 163 ஆவது இடத்தில் இருந்தது. எனினும் , இந்த வருடம் ஒரு இடம் முன்னேறி 162 ஆவது இடத்தை சிரியா பிடித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv