Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாக மாறும் இலங்கை! – நல்லாட்சி அரசு மீது சீறிப் பாய்கிறார் குணதாஸ

சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாக மாறும் இலங்கை! – நல்லாட்சி அரசு மீது சீறிப் பாய்கிறார் குணதாஸ

நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச சொத்துகளையும் சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளுக்குத்  தாரைவார்த்துவருகின்றது.
முன்னாள் அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம் எமது நாட்டின் மிகச் சிறந்த சொத்தாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனைசெய்துள்ள தற்போதைய நல்லாட்சி அரசு மத்தல விமானநிலையத்தை இந்தியாவுக்கு கூறுபோட நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அமெரிக்காவும் இலங்கை மீது கழுகுப் பார்வை செலுத்திவரும் சூழலில் அரசு மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தில் பலமிக்க நாடுகளுக்கு இலங்கையின் சொத்துகளை விற்பனை செய்வதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கை அந்நாடுகளின் யுத்தக்களமாக மாறும்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv