Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது.

சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றது. கொள்­க­லன்­க­ளில், லொறி­க­ளில் போதைப்­பொ­ருட்­கள் மீட்­கப்­ப­டு­கின் றன. பிடிக்­கப்­ப­டும் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு என்ன நேர்­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை.
எனி­னும், போதைப்­பொ­ருள்­களை இல்­லா­தொ­ழிக்­க­வும் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வும் அர­சுக்கு எவ்­வித திட்­டங்­க­ளும் கிடை­யாது – –என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv