Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விடுதலை புலிகள் இல்லாததால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பேராபத்து! பழநெடுமாறன்

விடுதலை புலிகள் இல்லாததால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பேராபத்து! பழநெடுமாறன்

2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள்.

ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற ஆயுதங்களை கீழே வைக்கின்றோம் என்று கூறவில்லை. என பழநெடுமாறன் தெரிவித்தார்.

மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்லும் சொல்லின் உண்மை அறிந்து சொல்லக்கூடியவர். இதனால் தான் ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்.

அதன் விளைவு தற்போது என்னானது? விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அந்நிய வல்லரசுகள் இலங்கைக்கு வரவில்லை. ஆனால் தற்போது இலங்கையில் ஆழமாக சீனா காலூன்றியதுடன், இந்து சமுத்திரம் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு போய் விட்டது.

இது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv