Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து! மக்களுக்கு விசேட எச்சரிக்கை

யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து! மக்களுக்கு விசேட எச்சரிக்கை

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் இந்த நோய் தாக்கம் இனங்காணபட்டது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

தென்பகுதியில் அண்மையில் இந்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே வடக்கில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களுக்கு அநாவசியமாகச் செல்லுதல் மற்றும் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை இயன்றளவு தவிர்ப்பதோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv