உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளின் சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல் , தேர்தல் வருடமான இவ்வருடத்தின் முதல் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் எனவும் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது பொதுத்தேர்தல் அதற்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார்! மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக கட்சி மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவருடத்திற்குள் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யார் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறை வேற்றுவேன்: மீண்டும் உறுதி
யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்காலத்தில் மரண தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று தெரித்த ஜனாதிபதி, ஆனால், அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.