ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை மக்கள் திரண்டு விரட்டியடித்துள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு இன்று (02) சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த கிராம மக்கள், அவர்களின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.
இதையடுத்து சந்திரசேன எம்.பி. உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.