தமிழ்த் தேசியத்துக்காக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் ஒற்றுமையாகப் பயணிக்கின்றார்கள்.
இடையிலே குழப்பிவிட்டு வெளியில் சென்றவர்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தைப் பார்த்து நீங்கள் (நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன்) நடந்து கொள்ளுங்கள்.
நீங்களும் மீண்டும் எங்களோடு இணைந்து தேசியத்தைக் காக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மயூரன் தெரிவித்தார்.
வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.
நாமும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இனத்தின் விடுதலைக்காக கூட்டமைப்பாக இருந்தோம்.
ஆனால் 15ஆண்டுகளில் இதுபோல ஒரு கணக்கு அறிக்கையைக்கூட எம்மால் பார்க்க முடியவில்லை. இந்தச் சங்கத்துக்கு ஒரு யாப்பு, வங்கிக் கணக்கு இருக்கின்றது. அதனைவிட ஐனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படுகின்ற நிர்வாகம் இருக்கின்றது.
ஒரு போக்குவரத்துச் சங்கத்துக்கு இருக்கக் கூடிய இந்த விடயங்கள் இனத்தின் விடுதலைக்கு தலைமைதாங்குகின்ற தலைமைகளிடம் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை. ஒரு சர்வாதிகாரப் போக்கான நிலமையே அங்கு இருக்கின்றது. தமிழ்த் தலைமைகளுக்கு உங்களுடைய சங்கம் முன்மாதிரியாக இயங்குவதையிட்டு மகிழ்சியடைகின்றோம் -– என்றார்.
மயூரன்
இந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன், உங்களுடைய சங்கத்தைப் பார்த்து வியப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் கூறினார். அதனை நாம் வரவேற்கின்றோம்.
20ஆண்டுகளாக இந்த தனியார் பேருந்துச் சங்கம் உடையாமல் தனித்துவமான முறையிலே பயணிக்கின்றது. நீங்கள் உடைத்துவிட்டுச் சென்று விட்டீர்கள். அவர்கள் உடைத்துவிடவில்லை.
விக்கியின் பலவீனம்
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்துணிவோடு செய்த ஒரேவிடயம் வவுனியாவில் பேருந்து நிலையத்தை இடமாற்றியது மட்டுமே. போக்குவரத்து அமைச்சு டெனீஸ்வரனிடம் இருந்து முதலமைச்சரிடம் செல்கின்றது.
இனி உங்களினுடைய பாடு அதோகதிதான் என்று கடந்த பொதுக் கூட்டத்தில் நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். டெனீஸ்வரன் தனது நிர்வாகத்தில் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்.
முதலமைச்சர் தனது ஆட்சிக் காலத்தில் பேச்சோடு மாத்திரம் நில்லாமல், செயலாற்றிய விடயமாக இந்தப் பேருந்து நிலையத்தை மாற்றியதை மாத்திரமே குறிப்பிட முடியும். அவர் நன்மைகளைச் செய்திருந்தாலும் பல இடங்களிலே தவறுகளைச் செய்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு எவ்வளவு தூரம் செல்வாக்கு இருக்கிறதோ அதேஅளவு வீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் இருக்கிறது என்றார்.