Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி

சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் இங்கு மக்களின் அடிப்படை வசிகள்கூட பூர்த்தி செய்யப்படாதுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் வீழ்ச்சிக்கண்டாதக உள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது மருத்துவத் தேவைகளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின்; ஊடாகவே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நாளாந்தம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஆயிரக்கணக்கானப் பொது மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். இவ்வாறு வரும் மக்களில் 100வீதமானவர்களும் தமிழர்கள்தான்.

வடக்கில் காணப்படும் 5 மாவட்டங்களில் வவுனியா, மன்னார் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். ஆகிய மூன்று மாவட்டங்களில்; முற்றிலும் தமிழ் மக்களே வாழ்கின்றனர். ஆனால், இன்று குறித்த மாவட்டங்களில் அரச பணிக்கு அமர்த்தப்படும் ஊழிர்களில் 90வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். இதன் எதிர்வளைவையே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் தமிழ் மக்களும் எதிர்கொண்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களில் பெரும்பாளானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்தவர்களாகவுள்ளனர். மொழி ரீதியான பிரச்சினை இங்கு செல்லும் மக்கள் எதிர்கொள்வதுடன், தமது நோய் என்னவென்றே சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது. தமக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளதென சிங்கள மொழியிலேயே தெரிவிக்க வேண்டியுள்ளது. முற்று முழுதாக சிங்கள மயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசியல் வாதிகள் எவரும் இன்னமும் வாய்த்திறக்கவில்லை.

இங்கு மருத்துவத் தேவைக்காக சென்ற சக்கரை நோயாளர் ஒருவர், தான் சக்கரை நோய் தொடர்பில் இரத்தப்பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்றேன். ஆனால், என்னுடைய நோயை தமிழ் மொழியில் தெரிவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு காணப்படுகிறது.

ஏதோ செய்கையில் நோயை தெரிவித்து இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், ஒருவாரம் அல்லது 5, 6 நாட்கள் கடந்தே பரிசோதனை அறிக்கையை கொடுக்கின்றனர். அவ்வாறு பரிசோதனை அறிக்கை கொடுக்கப்படுகின்ற போதிலும் சக்கரை நோய்க்கு உரிய மருந்துகளை மேலும் இரண்டு, மூன்று தினங்கள் கடந்தே வழங்குகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

தமிழ்; வைத்தியசாலைகளில் பெரும்பான்மை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் எதற்கு என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பிரச்சினையை இன்றுவரை அங்கு பணியில் இருக்கும் சில தமிழ் வைத்தியர்கள் வெளியிடவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.

காரணம், தமிழ் வைத்தியர்கள் அனைவரும் தனியார் மருந்தங்களை வைத்து மருத்துவத்தை வியாபாரமாக்கியுள்ளனர். குரல் கொடுக்க வேண்டியவர்களே இவ்வாறு மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை மூடிமறைக்கப்படுகிறது. எனவே, இது குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதுடன், சிங்களமயமாக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதித்திட்டங்களையும் முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேநிலைமைதான் வவுனியா பொது வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. வவுனியா வைத்தியசாலைக்கு 24 வைத்தியர்கள் தேவையாகவுள்ள நிலையில், 12 வைத்தியர்கள் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாளான வைத்தியர்கள் சிங்களவர்களாகவுள்ளனர். அதேபோல், தாதிமார்களில் பெரும்பாளானர்வர்கள் சிங்களவர்களாகவே உள்ளனர். புதிதாக வழங்கப்படும் நியமனங்களில் முற்று முழுதானவை பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்ததே. எனவே, ஒருபுறத்தில் சிங்கள மொழியை திணிக்கவும் மறுபுறத்தில் தமிழ் பிரதேசங்களை சிங்கள மயமாக்கவுமே எவ்வாறான திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனைத் தெரியப்படுத்த வேண்டிய அங்குள்ள வைத்தியர்கள் மருத்துவ வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைப்பதால் பிரச்சினைகளை சுட்டிக்காட்ட விரும்புவதில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv