Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / சிம்பு, தனுஷ் குறித்து ஓவியா கூறியது என்ன?

சிம்பு, தனுஷ் குறித்து ஓவியா கூறியது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா நேற்றிரவு தனது ரசிகர்களுடன் வீடியோ சேட் மூலம் உரையாடினார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்ததால் #AskOviyasweetz என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் தனுஷ், சிம்பு குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறும்படி ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த ஓவியா, ‘சிம்பு ஒரு மனிதநேயம் மிக்கவர், தனுஷ் ரொம்ப நைஸ் பெர்சன்’ என்று பதிலளித்தார்.

இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த தனுஷ், சிம்பு ரசிகர்கள் அவருக்கு நன்றி கூறி வருகின்றனர்.

மேலும் காஞ்சனா 3′ படத்திற்கு பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த முழு விபரங்கள் மிக விரைவில் வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

https://twitter.com/twitter/statuses/943531920490557440

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv