யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்த போதும், திட்டமிட்டு சுட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தரப்பினர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பிலேயே குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.