நாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களைில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்து ஆடைகள், சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்களின் 9 வெள்ளை ஆடைகள் மற்றும் மேலும் சில ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 29000 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆடை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது வீட்டில் இருந்து தற்போது 5 ஆடைகள் கிடைத்துள்ளன. ஏனைய 4 ஆடைகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவு இதுவரையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. இந்த ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று சென்று மத ஸ்தலங்களுக்கு தாக்குதல் மேற்கொள்வதற்காக ஆடை கொள்வனவு செய்துள்ளாக புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.