பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக கருதப்படும் நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, அவரது குடியுரிமை துறப்பில் செல்வாக்கு செலுத்துமா என்பது இனிவரும் நாட்களிலேயே தெரிய வரும்.
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்பதுடன், அங்கு திருமண நிகழ்வொன்றிலும் கலந்து கொள்ள சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.