Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / 16 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

16 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதையடுத்தும் கடந்த 29 ஆம் திகதியன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தையடுத்தும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேகத்தில் நொச்சிக்குளம் பாடசாலையின் ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் (வயது-50) என்பவரை இன்று காலை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv