Monday , December 23 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி

ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி

சர்வதேச ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் 550 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டின் வட பகுதியில் ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ ஆகியோர் கடந்த 2011 ஆண்டு முதல் பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் ஆய்வு நடத்தினர்.

சர்வதேச ஆராய்ச்சி குழுவினர் நடத்திய இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வின்போது கிடைத்த மண்டை ஓடு ஆகியவற்றை பரிசோதனை செய்ததில், அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே மிகப்பெரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv