Tuesday , December 3 2024
Home / முக்கிய செய்திகள் / இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்

இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்

“இலங்கையின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.”

– இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனைசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக மாறக்கூடும். அதற்கு முன்னர் இந்த அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றவேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமையால் நீதிபதிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இவ்வாறான உடன்படிக்கைகளைச் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் இவர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv