Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அதிமுக அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?

அதிமுக அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?

தமிழகம் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளபோது, அதிமுக இணைப்பு விவகாரத்தை தாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரு அணிகள் இணைப்பு ஒரு பிரச்னையே இல்லை. இது நாட்டின் பெரிய பிரச்னையா? மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்கிற செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது.

பவானி ஆற்றில் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டே வருகிறது. எல்லா பக்கமும் தமிழகத்திற்கான நதி நீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்து வருகின்றன.
ஒரு பாலைவனமாக தமிழகம் மாறி வருகிறது.அதிலிருந்து மீட்பது எப்படி? காப்பது எப்படி? என்கிற சிந்தனையோ, செயல்வடிவமோ எதுவும் இல்லை.

இந்த நிலையில் இந்த அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? பல மாதங்களாக இந்தப்பிரச்னைகள் போய்க்கொண்டு இருக்கின்றன. இதனை நான் வெறுக்கிறேன்’ என தெரிவித்தார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …