Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு !

நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு !

நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு !

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கான காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் கலகம் அடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதுதவிர பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் வீதித் தடைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான முழுமையான பாதுகாப்பிற்காக 60175 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv