கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன,
“அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதருவ அளிக்க முடிவு செய்துள்ள, ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை, சர்வாதிகார அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்காக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான பலமான வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கோருவதற்கு முடிவு செய்துள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆளும்தரப்பு ஆசனத்தில் அமருவதென்றே கட்சி முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.