Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாணவர் விடுதிக்குள் இராணுவம் தேடுதல்

மாணவர் விடுதிக்குள் இராணுவம் தேடுதல்

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதி மற்றும் கற்கை நிலையங்கள் இராணுவம் மற்றும் பொலிசாரால் இன்று கடும் சோதனை நடவடிக்கைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு அமைய, வவுனியாவிலும் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிசாரால் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்றயதினம் காலை 7.30 மணியிலிருந்து 11 மணிவரை வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகம் தீவிர சோதனைக்குள்ளாக்கபட்டுள்ளது.

எதிர்வரும் 6 ம் திகதி நாட்டின் அனைத்து பல்கலைகழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாக அரசு அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv