Wednesday , December 4 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆறாத வடு! யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள்!

ஆறாத வடு! யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள்!

தெற்காசியாவின் ஆசியாவின் அறிவுக் கருவூலமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

எரிந்த தீ அணைந்துவிட்டாலும் தமிழர்களின் மனதில் அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

1981ம் ஆண்டு. சிங்கள பேரினவாதம் தமிழர்களின் மேல் அடக்குமுறைகளையும், அடாவடித்தனங்களையும், கட்டவிழ்த்துக்கொண்டிருந்த காலப்பகுதி.

குறித்த ஆண்டின் மே மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவில், தமிழ் தலைமுறைகளின் மேல் ஊற்றப்பட்ட எரிதலாக, காதுகளில் வந்து விழுந்த செய்தி இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

ஈழ தமிழர்கள் தம் தலை மேல் தூக்கி நடந்த தாய் மொழியாம் தமிழ் மொழியின், பெருமைகளையும், அந்த பெருமைகளின் சாட்சியாக தமிழ் புத்தி ஜீவிகள் படைத்த, சேர்த்த பொக்கிஷங்களான, மீண்டும் கிடைத்துவிடுவதற்கு வாய்ப்பற்ற புத்தகங்களையும் அளிக்கும் விதமாக, தமிழின், தமிழர்களின் கருவறைமேல் நெருப்பள்ளி கொட்டியது சிங்கள பேரினவாதம்.

யாழ் நூலக வளர்ச்சியில் பங்கெடுத்தவர்கள், அதான் பயன் பெற்றவர்கள், யாழ் நூலகத்தை விலைமதிப்பற்ற, ஓர் இனத்தின் சொத்தாக எண்ணி தலை நிமிர்ந்து நடந்தவர்கள் அனைவரையும் உலுக்கிப்போட்டது யாழ் நூலக் எரிப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதாக வந்த செய்தியால் ஆய்வாளரும், கிறிஸ்தவ மதகுருவுமான அருட்தந்தை டேவிட் அடிகளார். அந்த இடத்திலேயே தன் இதயத்துடிப்பை நிறுத்திக்கொண்டார்

யாழ் நூலகத்தின் சிறப்பு

இது தெற்காசியாவின் அறிவுக் கருவூலம்.

எண்ணிலடங்காத புத்தகங்களையும், ஓலைச்சுவடிகளை பாதுகாத்து, பல தலைமுறைகளுக்கு பயனளித்த தமிழின் மிகப்பிரமாண்டமான ஒரு கருவறை.

உலகம் பேசுமளவிற்கு, தமிழினம் பெருமை கொள்ளும் யாழ் நூலகம், சமூக ஆர்வலர் கே.எம்.செல்லப்பா அவர்களின் எண்ணக்கருவால் உருவானது.

தன் வீட்டில் நடாத்திவந்த ஓர் சிறிய நூலகத்தை, சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கோடு, தன் நண்பர்களோடு சேர்ந்து சிறிதாக உருவாக்கியிருந்தார்.

நாளடைவில், பல நல்ல உள்ளங்களின் உதவியுடனும், சமூக நலன் விரும்பிகளின் அனுசரணையுடனும் விருட்சமாக வளர்ந்தது யாம் நூலகம்.

ஒரு புள்ளிக்கு மேல், ஆசியாவின் அறிவு களஞ்சியம் எனும் கிரீடத்தை சூடி, மிடுக்காக நின்ற யாழ் நூலகம், தமிழர்களின் தனிப்பெரும் சொத்தாக இருப்பதை சிங்கள இனவாத மூடர்கள் விரும்பிவில்லை.

அந்த வெறுப்பின் விளைவாகத்தான் சாம்பலாக்கப்பட்டதுதான் யாழ் நூலகம்.

இந்த அழிப்பில் மட்டும் ஏறக்குறைய 97000 புத்தகங்களை தமிழ் இனம் இழந்திருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய இழப்பாகும்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் அவ்வினத்தின் கலாசார, அறிவு சார்ந்த சின்னங்களையும் சொத்துக்களையும் அளிக்க வேண்டும் என்பது காலம் காலமாக இன அழிப்பாளர்களினால் பின்பற்றப்படும் வழிமுறை. அந்தவழிமுறைய பற்றியே சிங்கள் இனவெறிக்காடையர்களால் எரியூட்டப்பட்டது நம் நூலகம்.

அவர்களின் இந்த வெறியே உலகமே ஈழத் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த வராலாறு ஆரம்பமாவதற்கு வித்திட்டது.

இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் தமிழ் இனத்தை போலவே, தமிழின் தனிப்பெரும் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகமும் மீண்டும் தன்னை நிலை நிறுத்தி நிற்கின்றமை தமிழர்களின் பெருமை.

எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழும் ஒரு பீனிக்ஸ் பறவையாக, சாம்பல் மேட்டிலிருந்து உருப்பெற்றெழுந்து தனக்கேயான மிடுக்குடன், யாழ் நூலகம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது தமிழனின் வரலாற்றை பறைசாற்றி.

இதேவேளை இன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 38ம் ஆண்டு நினைவு தினம் ரெலோ கட்சியினால் நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது. நிகழ்வில் அக வணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv