சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன்
சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது.
சசிகலாவுக்கும், மற்றவர்களும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.