சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா இரண்டாவது நாளாக சந்தித்தார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல் நிலை கருதி சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த அவர் நேற்று குளோபல் மருத்துவமனைக்குச் சென்று கணவரை சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக, இன்றும் குளோபல் மருத்துவமனைக்குச் சென்று கணவர் நடராஜனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சசிகலா நேரில் கேட்டறிந்தார்.
காலை 11.30 மணி அளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலா சுமார் 2 மணி நேரம் அங்கு இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.